Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரேபாடலை இரண்டுபடங்களுக்குக் கொடுத்த சந்தோஷ்நாராயணன்?

சுதாகேபிரசாத் இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் படம் இறுதிச்சுற்று. ஒரேநேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகும் இந்தப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ்நாராயணன்.

அவர் செய்த ஒரு வேலையால் இந்தப்படக்குழுவினர் செய்வதறியாது திகைத்துப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி என்ன வேலை? இந்தப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் போட்டுக்கொடுத்த ஒரு பாடலைப் படமாக்கிவிட்டார்களாம். அதைப் படமாக்கிய பின்பு வெளியானது ஜோதிகா நடித்த 36வயதினிலே படம். அந்தப்படத்தைப் பார்த்த இறுதிச்சுற்று குழுவினருக்கு அதிர்ச்சியாம்.

ஏனெனில் அந்தப்படத்தில் இடம்பெற்ற ஹேப்பி ஹேப்பி என்கிற பாடலின் மெட்டைத்தான் இறுதிச்சுற்று படத்துக்கும் கொடுத்திருக்கிறார் சந்தோஷ்நாராயணன். இவர்களும் டியூன் சிறப்பாக இருக்கிறதென்று சந்தோஷ்நாராயணனைப் புகழ்ந்துவிட்டு அதைப் படமாக்கியும் விட்டார்களாம். அதன்பிறகுதான் 36 வயதினிலே வந்திருக்கிறது.

படமாக்கிவிட்ட அந்தப்பாடலை அப்படியே வைத்தாலும் நன்றாக இருக்காது, புதிதாக ஒரு பாடலை உருவாக்கிப் படம்பிடிக்கவும் சூழல் இடம்தராது என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷ்நாராயணன் அடுத்தப் பட வேலைகளுக்குப் போய்விட்டதாகவும் சொல்கிறார்கள். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்