Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதி புகாரால் தள்ளிப்போகிறதா புதிய படம்?

 விஜய்சேதுபதியின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட படம் சங்குதேவன். அந்தப்படத்தை இயக்குநர் ஹரியிடம் உதவிஇயக்குநராக இருந்த சுதாகர் என்பவர் இயக்கினார். படப்பிடிப்புக்காக திண்டுக்கல் புறப்பட்டுப்போனது படக்குழு. போன சில நாட்களிலேயே படப்பிடிப்பில் குளறுபடிகள் ஏற்பட்டதாம். அதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தாமல் உடனே சென்னை திரும்பிவந்துவிட்டார்களாம். இது நடந்தது 2013 ஆம் ஆண்டில் என்று சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் அந்தப்படம் வளரவில்லை. மேற்கொண்டு வளரவும் வாய்ப்பில்லை. அதனால் அந்தப்படத்தின் இயக்குநர் சுதாகர், ஏற்கெனவே தமிழில் சில படங்களை எடுத்த தயாரிப்பாளரிடம் கதைசொல்லியிருக்கிறார். அவருக்குக் கதை பிடித்துவிட்டதாம். அந்தக்கதைக்கு நாயகனாக பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் நடித்த லட்சுமணையும் நாயகியாக ரேஷ்மியையும் பேசிமுடித்துவிட்டார்களாம். சில நாட்களில் படப்பிடிப்புக்குப் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்களாம்.  

இதனால் நாயகன் நாயகி உட்பட எல்லோரும் எப்போது படப்பிடிப்பு என்று கேட்டும் இயக்குநர் மற்றும் தயாரிப்புத்தரப்பில் சரியான பதில் இல்லை என்று சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று படக்குழுவினருக்குத் தெரியவில்லையாம்.

இன்னொருபக்கம், தயாரிப்பாளர்கள் தரப்புக்கு இந்த இயக்குநரை நம்பிப்போகாதீர்கள் அவருக்குப் படம் எடுக்கத் தெரியாது என்று புகார்கள் வந்தனவாம். அந்தப்புகார் விஜயசேதுபதி தரப்பில் இருந்தே வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகிக்கொண்டிருக்கிறதென்று சொல்லப்படுகிறது. உண்மை என்னவோ?

 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close