Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்துல்கலாமுக்கு மரியாதை செய்யும் படம்

இன்றைய கல்வியின் நிலையையும், கற்ற கல்விக்கான வேலை வாய்ப்புகளின் தரத்தைப் பற்றியுமான கதைக்களத்தைக் கொண்டது “ஆகம்”. இந்தப்படத்தில்  மறைந்த ராக்கெட் நாயகன் அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பாடல்  உருவாகியிருக்கிறது. 

ஒவ்வொரு தனி மனிதத் தேவையும், சமூதாய நிலையும் இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்கான தேடலை அதிகப் படுத்தியுள்ளது. உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை எட்டிபிடிக்க நினைக்கும் இன்றைய சமூதாயத்தின் வெளிநாட்டு மோகமும், தான் நிலை பெற வேண்டும் என்ற எண்ணமும் இன்று பல இளைஞர்களை உலுக்கி வருகிறது. இதனால் பல்லாயிரக் கணக்கான கோடி டாலர் ஊழலும் மனித வளத் துறையில் நிகழ்ந்து வருகிறது.

சுதந்திரத்துக்கு  முன் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலித்திருந்தன. அதேபோல் இன்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ‘இந்தியனே வெளியேறாதே’ என்ற முழக்கம் ஒவ்வோரு மாணவனுக்கும் எட்டும் வகையில் ஒலிக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகைய சிக்கல்களும் அதனை நிவர்த்தி செய்யும் வழி வகைகளையும் ஆராயும் படம்தான் ‘ஆகம்’.

“நாட்டின் முன்னேற்றத்தைத் தன் முழு மூச்சாகக் கொண்டிருந்த அப்துல் கலாம் அவர்களைப் பற்றி ஒரு பாட்டு எங்கள் படத்தில் அமைத்துள்ளோம். அதை அவருக்குக் திரையிட்டு காட்டவும்  திட்டமிட்டிருந்தோம். காலத்தின் கட்டளையால் இந்த நாடே அவரை இன்று இழந்து தவிக்கிறது. நாட்டு மக்களின் அன்பையும் , ஆதர்ஷத்தையும் பெற்ற கலாம் அவர்களைப் பற்றி இயற்றிய பாடல் கொண்டே அந்த மாமேதைக்கு, உன்னத ஆன்மாவிற்கு அஞ்சலி செய்ய எங்கள் படக் குழு திட்டமிட்டுள்ளது.” என்கிறார் படத்தின் இயக்குநர் விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close