Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை!

தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வெளியிட்ட படம் காக்காமுட்டை. இப்படத்தில் வக்கீலையும், வக்கீல் தொழிலையும் தவறான வசனங்கள் கூறி சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று அகில இந்திய வக்கீல் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காக்காமுட்டை படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், மற்றும் இப்படத்தின் இயக்குநர் மணிகண்டன், அவதூறாக சித்தரிக்கப் பட்ட காட்சியில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஆகஸ்டு 6ம் தேதி ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட 4 பேர் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் காக்காமுட்டை படத்துக்கு இரண்டு தேசிய விருதுகளும், பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் பொதுவாக மக்கள் பேசும் வார்த்தைகளே. தனிப்பட்ட முறையில் யாரையும் தவறாகச் சித்தரிக்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் மேலும் அந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவை ஏற்றுக் கொண்டு தனுஷ் உள்ளிட்ட 4 பேர் மேலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று, எதிர் மனுதாரரான வக்கீல் சங்க தலைவர் மணிவண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close