Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலாமிற்காக திரையரங்கில் காட்சிகள் ரத்து!

முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் காலமானதையொட்டி நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல  நாளை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லியிலிருந்து இன்று ராமேஷ்வரம் கொண்டு வரப்படும் கலாமின் உடல் அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து அப்துல் கலாமின் உடல் நாளை இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது. அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பேரிழப்பு. அவருடைய உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி, நாளை (வியாழக்கிழமை) காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம்” என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close