Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யின் புலி படவிழாவில் பங்கேற்க கமல் மறுப்பு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டடோர் நடித்த புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டுநிகழ்ச்சி ஆகஸ்ட் இரண்டாம்தேதி நடக்கவிருக்கிறது. மகாபலிபுரம் அருகே இந்நிகழ்ச்சி நடக்கவிருக்கிறதாம்.

மிகப்பெரிய அளவில் இந்தவிழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையர் தவிர மேலும் சில முக்கிய நடிகர்களையும் அழைக்கத்திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஆந்திராவிலிருந்து சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு போன்றோர் கலந்துகொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழ்த்திரையுலகில் இருக்கும் முன்னணிநடிகர்கள் விழாவில் பங்குபெற்றால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் நினைத்திருக்கிறார்கள். அதனால் விழாவில் பங்குகொள்ள கமலை அணுகினார்களாம்.

அவரோ, அந்த நாளில் வேறுவேலைகளை எற்கெனவே ஒப்புக்கொண்டதால் விழாவில் பங்கெடுக்க இயலாது என்று சொல்லி மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரும் விழாவில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த படக்குழுவினர் இதனால் வருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close