Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலண்டனில் ஷங்கர், எந்திரன் 2 இறுதிவடிவம் பெறுகிறதா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன்படத்தின் அடுத்தபாகத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. நடிகர் நடிககைள் தேர்வு மற்றும் படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு ஆகியன ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் திரைக்கதையை முழுமையாக்கும் பணியில் ஒரு பெரியகுழு வேலை செய்ததாம். கிட்டத்தட்ட திரைக்கதையின் இறுதிவடிவம் தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்த லைகாபுரொடக்ஷன்ஸ் படநிறுவனம்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதனால் அந்நிறுவனத்தின் சார்பாக ஏற்கெனவே கருணாமூர்த்தியிடம் இந்தப்படத்தின் கதையைச் சொல்லிவிட்டாராம் இயக்குநர் ஷங்கர்.

இப்போது நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரனிடம் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லிவிட்டு படத்தை எடுக்கும் விதம் மற்றும் அதற்கான செலவுகளுக்கான விளக்கம் ஆகியனவற்றைச் சொல்வதற்காக இயக்குநர் ஷங்கர் இலண்டன் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச்சந்திப்பில் படம் குறித்த எல்லா விசயங்களும் இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் ஷங்கர் திரும்பி வந்ததும் படஅறிவிப்பு வெளிவரலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close