Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்ட சிம்பு

ஜூலை 28 தனுஷ் பிறந்தநாள் என்றாலும் ஜூலை 27 இரவே அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது.

மிகநெருங்கிய நண்பர்கள் மட்டும் அந்தப்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்குபெற்றதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் முதன்மையானவர் சிம்பு என்று சொல்கிறார்கள். அதேபோல சிவகார்த்திகேயனும் அந்த விருந்தில் இருந்திருக்கிறார்.

இவர்கள் தவிர ஜெயம்ரவி, ஜீவா, விஜயசேதுபதி, அரவிந்தசாமி ஆகிய நடிகர்களும் கலந்துகொண்டனராம். இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஜய் ஆகியோரும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இயக்குநர் விஜய்யுடன் அவருடைய மனைவி அமலாபாலும் வந்திருந்தாராம்.

சின்னத்திரை பிரபலமான டிடியும், பிரபலநிகழ்ச்சித்தொகுப்பாளராக இருக்கும் ரம்யாவும் கலந்துகொண்டார்களாம். சிம்புவுக்கும் தனுஷூக்கும் போட்டி, தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை, விஜய்சேதுபதிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பனிப்போர் என்று ஏகப்பட்ட செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன.

ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரேபார்ட்டியில் கலந்துகொண்டு சந்தோசமாக இருக்கிறார்கள் என்று திரையுலக வட்டாரங்கள் சொல்கின்றன.      
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close