Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏவுகணைநாயகனுக்கு ரஜினி, கமலின் அஞ்சலி!

     முன்னாள் ஜனாதிபதி A.P.J அப்துல்கலாம் நேற்று முன் தினம் மாலை தன் இன்னுயிர் நீத்தார். இந்திய நாடே அவரது இழப்பை தாள முடியாது பலரும் தங்களது வருத்தங்களையும் , இரங்கலையும் சமூக வலைகள் உள்ளிட்டவற்றில் தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் இரு ஜாம்பான்களான ரஜினியும், கமலும் தங்களது அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர். ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்று ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.  எனக்கு ‘மகாத்மா காந்திஜியையும், காமராஜர் மற்றும் பாரதியாரையும் பார்க்கும் கொடுப்பனை கிடைக்கவில்லை. ஆனால் போதுமான அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் மகாத்மா கலாம்ஜியுடன் வாழ, எத்தனையோ உயரங்களைக் கடந்த போதிலும் உங்கள் வாழ்வை பணிவாகவும், எளிமையாகவும் வாழ்ந்தீர்கள். மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷனாக வாழ்ந்தவர். கடவுள் அமைதியாக அவரது அன்பால் அரவணைத்துக்கொண்டார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என ரஜினி தனது ட்வீட்டுகளில் தெரிவித்துள்ளார். 

 

அதே போல் கமல் கலாமிற்காக ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

கமல்களும் இலாதுபோகும்

நாள்வரும்

இருந்தபோது

செய்தவை

அனைத்துமே

கணிப்பது

ஹெவன்என்று

ஒருவனும்

பரம் என்று ஒருவனும்

ஜன்னத்தென்று ஒருவனும்

மாறி மாறிச் சொல்லினும்

இகத்திலேயவன்

நடந்த பாதையே

புகழ் பெறும்

நிரந்தரம் தேடுகின்ற

செருக்கணிந்த

மானுடர்

தொண்டருக்கடிப்பொடி

அம்மெய்யுணர்ந்த நாளிது

புகழைத் தலையிலேந்திடாது

பாதரட்சையாக்கிய

கலாம் சாஹெப்

என்பவர்க்கு

சலாம் கூறும் நாளிது

- கமல்ஹாசன்

இப்படி முடிகிறது அந்தக் கவிதை 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்