Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஎஸ்ஓபி என்றால் என்னவென்று தெரியாத இசையமைப்பாளர் இமான்

  வாசுவும்சரவணனும்ஒண்ணாபடிச்சவங்க படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இமான் பேசும்போது, இந்தப்படத்தைப் பற்றி என்னிடம் பேசவந்த இயக்குநர் ராஜேஷிடம் படத்தின் பெயர் என்ன? என்று கேட்டேன்.

அதற்கு வாசுவும்சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க என்று சொன்னதோடு நில்லாமல், சுருக்கமா விஎஸ்ஓபி ன்னு சொல்லலாம் என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். எனக்கு விஎஸ்ஓபி என்றால் என்னவென்றே தெரியாது, ஆனாலும் நானும் அப்போதைக்கு சிரித்துச் சமாளித்தேன்.

அதன்பின் அவர் போனபின்பு என் அப்பாவிடம், ராஜேஷ் விஎஸ்ஓபின்னு சொல்லிட்டு ஒருமாதிரி சிரிச்சார், அப்படின்னா என்ன அர்த்தம்? என்று கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை. அதன்பின் என் மனைவியிடம் இதைச் சொன்னபோது, அய்யய்யோ இப்படியெல்லாமா பேர் வைப்பாங்க என்று சொல்லிவிட்டு அதன் அர்த்தத்தைச் சொன்னார் எனறு பேசினார்.

அதன்பின் பேசவந்த சந்தானம், நம்ம டீம்ல இப்படி ஒரு ஆளா? இன்னிக்கே பார்ட்டி அரேஞ்ச் பண்ணி அதற்கு இமானை வரச்சொல்லுங்க எல்லாவற்றையும் கத்துக்கொடுத்திடுவோம் என்றார்.   

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்