Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது உறவினர் இறந்த சோகத்தைக் உணர்கிறேன்: கலாமுக்கு வடிவேலு அஞ்சலி!

 இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அறிவியலாளருமான A.P.J.அப்துல்கலாம் மறைவையொட்டி நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் அமைதியான வழியில் மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

 இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் ,பொதுமக்கள், ஏராளமான பள்ளி மாணவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், வடிவேலு உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

அப்போது பேசிய வடிவேலு, உலகத்தின் அனைத்து வல்லரசு நாடுகளையும், சர்வசாதாரணமாக பெயர் வைக்கப்படாத வல்லரசு நாடு இந்தியா என பீதியைக் கிளப்பி, இந்தியாவைத் தலைநிமிரச் செய்து, தமிழர் அனைவருக்கும் பெருமையைச் சேர்த்த தமிழ்த் தங்கம் , ஒரு மாபெரும் விஞ்ஞானி. இளைஞர்களுக்கெல்லாம் அவர் ஒரு கல்வி விளக்கு. 

ஐயா ,அப்துல்கலாம் பிரிந்த நாள் நமக்கெல்லாம் ஒரு கறுப்பு தினம். இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது உறவுக்காரர் இறந்தது போல் உணர்கிறேன் நான். அவர் நம்மை விட்டு பிரிந்தது மிகப்பெரிய வேதனை. 

அவர்போலவே எல்லா இளைஞர்களும், மாணவர்களும் ஒவ்வொரு அப்துல்கலாமாக மாறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என வருத்தத்தைப் பதிவு செய்து விடைபெற்றார் வடிவேலு. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close