Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரவைமுனியம்மாவுக்கு ஐந்துஇலட்சம் கொடுத்தார் தனுஷ்

அறுபதுவயதில் நடிக்க வந்தார் பரவைமுனியம்மா. வந்த சில ஆண்டுகளில் நிறையப்படங்களில் நடித்தார். கடைசியாக மான்கராத்தே படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடித்திருந்தார். இப்போது நோயுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பொருளாதாரரீதியாகவும் சிரமப்படுவதாகச் சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு சரத்குமார், விஷால் ஆகியோர் பணஉதவி செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது தனுஷூம் பரவைமுனியம்மாவுக்குப் பணஉதவி செய்திருக்கிறாராம். அவர்களைக் காட்டிலும் அதிகத் தொகையாக, ஐந்துஇலட்சம் ரூபாயை பரவைமுனியம்மாவுக்கு தனுஷ் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தத்தொகையை அவரிடம் சேர்ப்பிக்கும்படி கொடுத்தனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பரவைமுனியம்மாவுக்கு விஷால் சார்பில் உதவி செய்யப்பட்டபோது, அவர் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அந்தப்படத்தைப் பார்த்து அவருடைய நிலையறிந்து இந்த உதவியை தனுஷ் செய்ததாகச் சொல்லப்படுகிறது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்