Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயனைப் பார்த்து கண்ணீர்விட்ட பரவைமுனியம்மா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரவைமுனியம்மா கடைசியாக சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தே படப்பாடலொன்றில் நடித்திருந்தார். அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதே தன் சித்தப்பா மூலம் பரவைமுனியம்மாவுக்கு உதவி செய்திருந்தாராம் சிவகார்த்திகேயன்.

இப்போது மருத்துமனைக்குச் சென்று அவரைப் பார்த்திருக்கிறார். அதோடு அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரையும் சந்தித்து அவருடைய உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தததோடு, சிகிச்சைக்கு எது தேவையென்றாலும் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்ததாகத் தெரிகிறது.

அதோடு பரவைமுனியம்மா பெயரில் ஒரு வங்கிக்கணக்குத் தொடங்கி மாதாமாதம் அதில் பணம்போடுவதாகச் சொல்லியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதற்காக சிவகார்த்தியேனின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டபடி நன்றி சொன்னாராம் பரவைமுனியம்மா.

சரத்குமார் மற்றும் தனுஷ் ஆகியோர் உதவியது போக பரவைமுனியம்மாவின் மாதாந்திரச் செலவுகளுக்கு விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் உதவ முன்வந்திருப்பது வரவேற்புக்குரியதாக இருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close