Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”விஜய் சூப்பர் ஸ்டார் தான்” சொல்கிறார் நட்டி!

விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில்  நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சிம்புதேவன் ,தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் - ஷிபு தமீம், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், கலை இயக்குநர் முத்தையா, கிராஃபிக்ஸ் கமலகண்ணன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு புலி படத்தை பற்றியும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினர்.

அதில் பேசிய ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ், துப்பாக்கி படத்துல நான் ஒரு பாட்டுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்தேன் அப்போதே விஜய் சார் என்னை அழைத்து கூடிய விரைவில் ஒரு புதுமையான கதையம்சத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன் அந்த படத்துக்கு நீங்கள்தான் ஒளிப்பதிவு என்று கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன். அதன்பின் ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து இயக்குநர் சிம்புதேவனிடம் கதையை கேட்க சொன்னார் நானும் கதையை கேட்டபின் இப்படி ஒரு சுவாரஸ்யமான கதையில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் புலி திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர்களை பற்றி நான் கூறியாக வேண்டும் 2015ம் ஆண்டு அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது புலி படம்தான். எனக்கு என்ன சாதனங்கள் வேண்டுமென்றாலும் அதனை உடனே வரவழைத்து கொடுத்தார்கள். 140 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடந்தது எந்தவொரு நாளும் யார் என்ன கேட்கிறார்களோ அது கிடைத்தது, யாருக்கும் இல்லை என்ற பதில் வந்ததேயில்லை. அந்தளவுக்கு பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் உறுதுணையாக இருந்தார்கள். அதன்பின் படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும் எனக் கூறினார். 

அதே போல் இவற்றையெல்லாம் பேசுவதற்கு முன்பு நட்ராஜ் விஜய்யைக் குறிப்பிடும் போது சூப்பர் ஸ்டார் விஜய் என குறிப்பிட்டார், பத்திரிகையாளர்கள் சூப்பர் ஸ்டார் என தெரிந்துதான் சொன்னீர்களா அல்லது நா தவறி சொல்லிவீட்டீர்களா எனக் கேட்க அவர் சூப்பர் ஸ்டார் தானே, பத்திரிகையிலேயே சொல்லிவிட்டார்களே எனக் கூறினார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்