Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்திற்கு நோ சொன்ன இயக்குநர்?

 மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் ‘அட்டகத்தி’ படத்தின் ரீமேக்காக வெளியான படம் தான் ‘பிரேமம்’ . இந்த படம் மலையாள சினிமா உலகில் புது ட்ரெண்டையே உருவாக்கியுள்ளது. படத்தின் பாடல்களும் சரி, படமும் சரி மெகா ஹிட். மேலும் இந்த படத்தின் ’மலரே’ என்ற பாடல் தமிழ் ரசிகர்களின் பாடல் லிஸ்ட்டிலும் டாப் இடம் பிடித்துள்ளது. 

இந்நிலையில் பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸை ரஜினி சமீபத்தில் அழைத்து பாராட்டியுள்ளார். பாராட்டுகளை பெற்ற அல்போன்ஸிடம் சௌந்தர்யா ரஜினிக்காக ஒரு கதைத் தயார் செய்யும்படி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தயாரிப்பாளரான சௌந்தர்யாவே தன் அப்பாவிற்காக கதை தயார் செய்ய சொன்னதே ஆச்சர்யமான விஷயம், ஆனால் அல்போன்ஸ் , நான் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவன், ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு நான் வளரவில்லை எனக் கூறி வேண்டாம் என சொல்லிவிட்டாராம். எத்தனையோ பெரிய இயக்குநர்களெல்லாம் ரஜினி காந்த்தை இயக்க காத்திருக்கையில் ஒரு இயக்குநர் அந்த வாய்ப்பை நிராகரித்தது சினிமா உலகினரிடையே அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close