Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திறமைசாலிகளை ஊக்குவிக்க தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

நடனத்தில் தொடங்கி நடிப்பு, இயக்கம் என தனக்கென்று தனிப் பாதையில் தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் கொடி கட்டிப் பறக்கும் பிரபுதேவா அடுத்ததாக  தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.

பிரபுதேவா தான் புதிதாக தொடங்கியுள்ள பட நிறுவனத்திற்கு “பிரபுதேவா ஸ்டூயோஸ்”  என்று பெயரிட்டுள்ளார்.  தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு  முதற்கொண்டு அனைத்தும் புதுமையாக இருக்கும் என்கிறார்கள்.  இந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.
 
பிரபுதேவா கூறும்போது “ சர்வதேசத் தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

தமிழ்த் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை.தேர்ந்த, அனுபவமுடைய பலரைக் கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழி, ப்ராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று  தங்களது திறமையை வெளிக் காட்ட வேண்டும்.நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து  வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்வதில் முனைப்பாகச் செயல்படும் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்'  என்று கூறினார் பிரபு தேவா.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close