Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபுதேவாவுக்குப் பின்னணியில் இருப்பது யார்?

  பிரபுதேவா புதியபடநிறுவனம் தொடங்கி பல திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த நிறுவனத்தின் சார்பில் உருவாகவிருக்கும் படங்கள் பற்றி அறிவிப்பு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

திடீரென பிரபுதேவாவுக்குப் படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கவேண்டும் என்கிற ஆர்வம் வந்ததெப்படி? என்றால், கல்வியாளராக இருக்கும் ஒரு பெரியபுள்ளி பிரபுதேவாவுக்குப் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பணம் முழுக்க அவருடையது என்றும் படங்கள் தேர்வு மற்றும் தயாரிப்புப்பொறுப்புகள் பிரபுதேவாவினுடையது என்றும் சொல்கிறார்கள்.

தமிழ் மட்டுமல்லாது பிறமொழிப்படங்களையும் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லியிருந்தாலும், அந்நிறுவனத்தின் முதல்படத்தைத் தமிழில் எடுக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இயக்குநர் விஜய்யிடம் உதவியாளராக இருந்த விக்டர்ஜெயராஜ் என்பவர் இயக்கும் படம் தயாராகவிருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப்படத்தில் முக்கியவேடத்தில் பிரபுதேவா நடிப்பார் என்று தெரிகிறது. அநேகமாக பணம் போடுகிற முக்கியப்புள்ளியின் மகன் கதாநாயகனாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்