Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னோட PT டீச்சர பார்த்த மாதிரியே இருக்கு: ட்விட்டரில் ஆர்யா , ஜி.வி அட்ராசிட்டி

பிரபலங்கள் பலரும் ட்விட்டர் , முகநூல் என ஆர்வமாக ட்வீட்டுகளை பகிர்ந்து ரசிர்களை குஷி படுத்தி வருகிறார்கள். பல பிரபலங்கள் சமீபத்தில் இணைந்தனர். இன்னும் சிலர் வரும் முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சமீபத்தில் இணைந்த சூர்யா , ஆர்யா உள்ளிட்டோர் மிக அதிகமாகவே ட்விட்டரைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் ஆர்யா ட்விட்டரில் குறும்பாக ட்வீட்டுகளைப் போட்டு மற்ற நண்பர்களை செல்லமாக சீண்டவும் செய்து வருகிறார். 

இந்நிலையில் இப்போது இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை செல்லமாக வம்பிழுத்து வருகிறார். “ நண்பர்களே சந்தோஷமான செய்தி, மை டார்லிங் ஃப்ரண்ட் ஜி.வி.பிரகாஷ் அவரது அடுத்த படமான ’புரூஸ் லீ’ படத்துக்காக 6 பேக் வைக்கப் போகிறார். உண்மையான இன்ஸ்பிரேஷன் பட்டி ஐ லவ் யூ’ என ட்வீட் போட அதற்கு ஜி.வி பதில் ட்வீட்டில் ஆர்யாவை செல்லமாக வம்பிழுத்துள்ளார். 

”ஜாம் (ஆர்யாவை செல்லமாக சொல்லுவார்கள்) ஜாமோட 8 பேக்குக்கு அப்பறம் தான் நான் 6 பேக் வைப்பேன். ஏன்னா அவர் தான் எல்லாருக்கு இன்ஸ்பிரேஷன்” என ட்வீட் போட்டவர் , ஆர்யாவிடம் உடற்பயிற்சி டிப்ஸ் பெறுகிறார் போல, “ ஜாம் உங்களைப் பார்த்தால் என்னோட ஸ்கூல்  PT டீச்சர பார்த்த மாதிரியே இருக்கு” என இன்னொரு ட்வீட்டில் கூறியுள்ளார். 

இவர்களின் இந்த ட்விட்டர் உரையடலை ரசிகர்கள் குஷியாக பகிர்ந்தும், கமெண்ட் கொடுத்தும் வருகிறார். மேலும் தனது நண் பர்கள், ரசிகர்கள் என பலரும் ஆர்யாவைப் பின்பற்றி உடற்பயிற்சி, சைக்கிள் பயணம் என செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை ஒவ்வொருவரையும் தனித்தனியாக டேக் பண்ணி சூப்பர் ப்ரோ தொடர்ந்து பண்ணுங்க என ஊக்கமும், பாராட்டும் செய்கிறார் ஆர்யா. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close