Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது இன்னும் ஒருமாதம் தள்ளிப்போய் செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏன் தள்ளிப்போனது? என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ரஜினியிடம் முதலில் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அதை முழுமையான திரைக்கதையாக்கி அவரிடம் சொன்னபோது அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லையென்றும் சொல்லப்படுகிறது. அதனால் அதில் தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்து ரஜினியிடம் சொல்லி அவரைத் திருப்தி செய்துவிட்டுத்தான் படப்பிடிப்பைத் தொடங்கவேண்டும் என்று இயக்குநர் முடிவு செய்திருப்பதாகவும் இப்போது திரைக்கதையை திருத்தி எழுதும் வேலைகளில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்கும் என்று சொல்லவேயில்லையே, முதலிலிருந்தே செப்டம்பரில்தான் படப்பிடிப்பு தொடங்குவது என்று திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இயக்குநர் ரஞ்சித் தற்போது மலேசியாவில் இருக்கிறாராம். அங்கு போய் படப்பிடிப்பு நடத்தும் இடங்களைத் தேர்வு செய்துவிட்டு இன்னும் சில நாட்களில் சென்னை வந்துவிடுவார் என்றும் அதன்பின் திரைக்கதை வேலைகளை இறுதிசெய்துவிடுவார் என்றும் அப்புறம் திட்டமிட்டபடி செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close