Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி சொன்ன விஷால்!

நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட  நடிகர்கள் அவருக்கு உதவி செய்துவந்தனர்.

 ஏழ்மை காரணமாகவும்,  முதுமை காரணமாகவும் பரவை முனியம்மாவுக்கு வறுமை சூழல் நிழவியது. இதை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா,  புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலமாக 6 லட்சம் நிதியுதவியும், மாதந்தோறும் ரூ6.ஆயிரம் உதவித் தொகையும் கட்சி நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதனால் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சரத்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close