Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனக்கு பொய்யா ஒருவரை நேசிக்கத் தெரியாது - புலி விழாவில் விஜய் வெளிப்படைப் பேச்சு

விஜய் நடிப்பில் புலி படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய், “ அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாதது நமது வாழ்க்கை. இருக்குற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தனும். எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சிதான் பழக்கம் என்று பேசினார். 

மேலும் அவர் பேசியதாவது, “  ரொம்ப நாளாவே ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கனும், ஆனா அதே நேரம் கமர்சியல் காட்சிகளோட நடிகனும் என்று நினைத்திருந்தேன்.

பொதுவா பரீட்சை எழுதுறவங்க அதிகமாகவும், மார்க் போடுறவங்க குறைவாகவும் தான் இருப்பாங்க. இங்க பரீட்சை எழுதுறவங்க குறைவாகவும், மார்க் போடுற நீங்க அதிகமாவும் இருக்கீங்க. புலிக்கு எத்தனை மார்க்குனு பரிட்சை எழுதுன நாங்க சொல்ல கூடாது. மார்க் போடுற நீங்க தான் சொல்லனும்.

ஒரு தயாரிப்பாளர் கடன் வாங்கி  பணத்தை போடுறார். எத்தனையோ நபர்கள் உழைக்கிறாங்க. எந்த உழைப்புமே போடாம திருட்டுத் தனமா போனில் எடுத்து இணையத்தில் பரப்பி எங்க எல்லோரையும் குழப்பி, மண்ணை போட்டுப் போய்டுவாங்க.

எனக்காக மட்டும் பேசவில்லை. எல்லா ஹீரோக்களுக்கும் சேர்த்து தான் பேசுறேன். திருட்டுத் தனமா வெளியிடுவது, வயிற்றில் ஆரோக்கியமா வளர்ந்திட்டு வர குழந்தையை சுகப்பிரசவம் ஏற்படுறதுக்கு முன்னாடியே சிசேரியன் பண்ணி சாகடிக்கிற மாதிரி இருக்கு. 

எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். பொய்யா ஒருத்தரை நேசிக்கவே தெரியாது. நமக்குப் பின்னாடி பேசுறத நினைத்து கவலைப் படக்கூடாது. அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாதது நமது வாழ்க்கை. இருக்குற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தனும். எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சிதான் பழக்கம்.

பொதுவா வெற்றிக்குப் பின்னாடி ஒரு பெண்ணோ ஆணோ தான் இருப்பாங்க. ஆனா என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருக்கிறது. அதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே. பின்னாடி பேசறவங்களை பத்தி எனக்கு கவலை இல்லை. நான் என்னுடைய தோல்வியில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன்

பில்கேட்ஸ் வாழ்க்கையில் அவரை சுற்றி இருக்குறவங்க அவரை குறை சொல்லிக்கொண்டும், திட்டிக்கொண்டுமே இருப்பார்களாம். அவரும் அந்த குறைகளையெல்லாம் சரிபண்ணிட்டே இருப்பாராம். இன்று உலகத்திலேயே பெரிய தொழிலதிபரா பில்கேட்ஸ் இருக்காரு. அவரை குறை சொன்னவங்க எல்லோரும் அவரின் கம்பெனியில் ஊழியரா இருக்காங்க. நீ என்ன பெரிய பில்கேட்ஸானு தான கேக்குறீங்க. எப்போவோ படிச்சது. ஏன் இதையெல்லாம் உங்களிடம் பேசுகிறேன் என்று தெரியவில்லை.
நியாபகத்துக்கு வர உங்களுடன் பகிர்ந்துகொண்டேன் அவ்வளவுதான்.

கடவுள் முன்னாடி மண்டிப்போட்டா யார் முன்னாலும் எழுந்து நிற்கலாம். நமக்கு தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஏதும் தெரியாதுனு மட்டும் நினைச்சிடாதீங்க. நமக்கு சொல்லித் தருவதே மற்றவர்கள் தான் என்று பேசினார் விஜய். 

புலி பட இசை வெளியீட்டு விழா ஆல்பத்திற்கு: http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4565

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close