Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜீவா, ஹன்சிகா நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம்!

புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று நடந்தது. செப்டம்பர் 17 அன்று புலி படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதற்குள்ளாக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாருடைய தயாரிப்பில் அடுத்தபடத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றிருக்கிறது.

தமிழுக்குஎண்ஒன்றைஅழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கும் இந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். முதன்முறை ஜீவா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்தப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார். முதலில் இந்தப்படத்தை ஜீவாவே தயாரிப்பதாக இருந்ததாம். அதன்பின் தயாரிப்பாளர் மாற்றம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்போதும் படப்பிடிப்பு தொடங்கி நடக்கும் நேரம் இந்தப்படத்தின் தயாரிப்பில் அவரும் இணைந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்று படத்தொடக்கவிழாவுடன் பெயுருக்கு படப்பிடிப்பும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. சில நாட்களில் முழுமையான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்