Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்களுக்காக 1 கோடி கொடுத்தார் ராகவா லாரன்ஸ்

‘காஞ்சனா -2’ வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸிடம் படம் இயக்கித் தரும்படி கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் பல அணுகிவந்தன.  இந்நிலையில் ‘வேந்தர் மூவிஸு’க்காக இரண்டு படங்களை இயக்கி, நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ். அப்படங்களுக்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என பெயரிடப்பட்டுள்ள இவ்விரு படங்களுக்காக ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் ராகவா லாரன்ஸுக்கு 1 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கியது. இந்த 1 கோடி ரூபாயை தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் குடும்பங்களுக்கு செலவழிக்கப் போவதாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ்.

அப்துல் கலாமின் பெயரில் ‘கலாமின் காலடிச்சுவட்டில்...’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இந்த உதவிகளை செய்ய இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதை நடைமுறைப்படுத்தி செயல்படுத்த, ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். அவரது ஆலோசனையின்படி தமிழகத்தில் உள்ள நேர்மையான 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தலா 1 லட்சம் வழங்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அந்த 100 இளைஞர்களின் மூலமாக ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்காக இந்த தொகையை செலவிடப்போவதாகவும் அறிவித்தார். சென்னையிலுள்ள ராணிஅண்ணாநகரை பசுமையாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். இந்த அமைப்பில் யார் வேண்டுமானாலும் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யலாம் என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close