Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்கர் குறித்த செய்திக்கு ராஜமௌலி பதில்!

 ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமான உருவாக்கத்தில் வெளியாகி 500 கோடிகளை வசூலித்த படம் ‘பாகுபலி’. இந்த படத்தின் வெற்றிக்கு கண்டிப்பாக அடுத்த ஆண்டு எல்லா விருது பட்டியலிலும் இடம்பெறும் என இப்போதே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பலரும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கலாம் எனக் கூறிவருகிறார்கள். ஏனெனில் ராஜமௌலியின் முந்தைய படமான ஈ படம் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அந்த படத்தை விட அதிக அளவில் வசூலை வாரிக்குவித்த இந்த படம் கண்டிப்பாக ஆஸ்கரைத் தட்டும் என எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ராஜமௌலி நான் ஆஸ்கர் விருது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஒரு நல்ல படம் கொடுக்க நினைத்தேன் கொடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

எனினும் இப்போதே இந்த படத்தின் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி இணையம் முழுக்க மீம்ஸ்கள், ஸ்டேட்டஸ்கள் என பெருகிவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்புகள் வலுத்தது இந்திய படங்களிலேயே இந்த படத்திற்கு தான் முதல் முறை எனலாம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close