Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகவாலாரன்ஸின் இயக்கத்தில் முதல்ஆளாக இணைந்த டிடி

ராகவாலாரன்ஸ் நடிக்கும் புதியபடங்களான மொட்டசிவா கெட்டசிவா, நாகா ஆகிய படங்களின் முதல்பார்வை நேற்று வெளியிடப்பட்டது. அந்த மேடையில் படத்தின் தயாரிப்பாளர்கள் லாரனஸ்க்கு ஒருகோடி ரூபாய் முன்பணம் கொடுக்க அதை அப்படியே ஏழைமாணவர்களுக்குக் கல்வி உதவி, மருத்துவ உதவி ஆகியனவற்றுக்காகச் செலவிடுவதாக அறிவித்தார்.

நூறு இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் ஆளுக்கு ஒருஇலட்சம் கொடுத்துவிடுவேன். அவர்கள் உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவலாம் என்ற லாரன்ஸ், அந்த இளைஞர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் அப்துல்கலாம் என்கிற பெயரைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார். வரும் காலங்களில், அந்த இளைஞர்கள் மட்டுமின்றி நானும் தமிழகஅரசு அப்துல்கலாம் பெயரில் அறிவித்துள்ள விருதை வாங்க ஆசைப்படுகிறேன் என்று லாரன்ஸ் சொன்னார்.

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சின்னத்திரை பிரபலம் டிடி, உடனே அந்த நூறுபேரில் ஒருவராகத் தான் சேர்ந்துகொள்வதாகச் சொன்னார். அதை உடனே ஒப்புக்கொண்ட லாரன்ஸ், டிடி யின் உதவி செய்யும் மனம் எனக்குத் தெரியும் எனவே அவரை நம்பிப்பணம் கொடுக்கலாம், நான் முதல் ஒருஇலட்சத்தை அவரிடம் தருகிறேன் என்றார். அதற்கு நன்றி சொன்னதோடு ஒரு இலட்சத்தில் ஒவ்வொரு பைசாவுக்கும் உங்களுக்கு முறையான கணக்கு வந்து சேரும் என்றார் டிடி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close