Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்தை இயக்கப் போகிறார் ராஜமௌலி?

 பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தில் மிக அக்கறையுடன் பணியாற்றி வரும் ராஜமௌலி ‘பாகுபலி’ யின் இரண்டாம் பாகத்தையடுத்து மகேஷ்பாபு படம் அதனை அடுத்து ஒரு படம் தெலுங்கு தமிழ் என எடுக்கும் முடிவில் உள்ளாராம். 

மேலும் இந்தக் கதை அஜித் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரையும் ஹீரோக்களாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாம். இதை ராஜமௌலியின் தந்தையும் ,ஓடிக்கொண்டிருக்கு 400 கோடி வசூல் படங்களான ’பஜ்ராங்கி பாய்ஜான்’ மற்றும் பாகுபலி படங்களின் கதை எழுத்தாளருமான கே.வி.விஜயேந்திரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

இது தென்னிந்திய ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். முக்கியமாக தமிழகத்தில் தல என மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள அஜித்தின் ரசிர்களுக்கு இனிப்பான செய்தியும் கூட என அந்த பேட்டியில் ராஜமௌலியின் தந்தை கூறியுள்ளார்.

இந்த படம் 2016 இறுதியில் வெளியிடலாம் என பேசி வருவதாகவும் பதிவு செய்துள்ளார் ராஜமௌலியின் தந்தை. இந்த இவ்விரு படங்களுக்கு நடுவில் மகேஷ் பாபுவை இயக்க உள்ள ராஜமௌலியின் படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close