Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு அடுத்து தனுஷ்

பிரபுசாலமன் இயக்கும் படத்தைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தற்போது பிரபுசாலமனின் படப்பிடிப்பு பாதிவரை முடிந்திருப்பதகாச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து துரைசெந்தில்குமாரின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறனின் படம் தொடங்கவேண்டும், ஆனால் அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதென்கிறார்கள். வெற்றிமாறனின் படத்துக்கு முன்பாக தனுஷ் ஓர் ஆங்கிலப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு அறுபதுநாட்களில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

யார் இயக்குநர்? எந்த மாதிரியான படம்? என்பனவற்றை இப்போதே சொல்லவேண்டாம் என்று வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். தமிழ்ப்படங்களில் நடித்து தேசியவிருது பெற்றபின்பு இந்திக்குப் போய் அங்கும் நற்பெயர் பெற்றுவிட்ட தனுஷ், அடுத்து ஆங்கிலப்படங்களின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார்.

ஏற்கெனவே ரஜினிகாந்த் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தமிழ்நடிகர்கள் யாரும் ஆங்கிலப்படங்களில் நடித்ததாகத் தகவல் இல்லை. இப்போது தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close