Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் ஜெயலலிதா கதையில் ரம்யா கிருஷ்ணனா?

முதல்வரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

ரம்யா கிருஷ்ணனின் நடிப்புக்கு தீணி போடும் பாத்திரமாச்சே என நமக்கும் கொஞ்சம் பரபரப்பு தொற்றிக் கொள்ள இதை ரம்யா கிருஷ்ணன் தரப்பிலேயே கேட்டுவிடுவோம் என அவரது சகோதரி வினயாவிடம் விசாரித்தபோது, 

என்ன அப்படி ஒரு செய்தி பரவுகிறதா, என ஆச்சர்யப்பட்டவர், கண்டிப்பாக இல்லை என மறுத்தார். மேலும் இந்தக் கதை குறித்து யாரும் தங்களிடம் பேசவில்லை எனவும் தெளிவாக கூறினார். மேலும் இது நல்ல கதையாயிற்றே. ஒருவேளை அப்படி நடிக்க இருப்பின் கண்டிப்பாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து செய்தியை நாங்களே வெளியிடுவோம் என்றார். 

உண்மையும் அதுவே , சினிமா , அரசியல் தாண்டி ஒரு பெண்ணாக அதுவும் தனி ஆளாக இருந்து ஆட்சி பீடத்தை பிடிப்பது என்பது சாதரணமான விஷயம் அல்ல. ஜெயலலிதா கதையெனில் கண்டிப்பாக நடிப்பதற்கும், காட்சிகள் வடிவமைப்புக்கும் சிறந்த கதைக்களமாகவே இருக்கும். மேலும் இந்தக் கதையில் ரம்யா கிருஷ்ணனின் பெயர் அடிப்பட்டதிலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.கம்பீரம், சோகம், வீரம் என நடிப்புத் திறமை கொஞ்சம் அதிகமாகவே உள்ள நடிகை என்பதால் இந்த கதை படமாக ஒருவேளை எடுக்கப்பட்டால் தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் மற்றும் பெண் முக்கியத்துவம்  வாய்ந்த படமாகவே இருக்கும். இயக்குநர்கள் கவனிக்க. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close