Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளியன்று வருகிறது அஜித் படம்

கொல்கத்தாவில் நடந்துவந்த அஜித் படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்துவிட்டார்கள். தொடக்கத்தில் சென்னை அதன்பின் இத்தாலி அதற்கப்புறம் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பில் படத்தின் அறுபத்துஐந்து சதவீதம் படமாக்கப்பட்டுவிட்டதாம்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் சென்னையில் தொடங்கவிருக்கிறது. அதில் மொத்தப்படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. படத்தை நவம்பர் பத்தாம்தேதி தீபாவளியன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சொல்லியிருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் முழுக்கப் படப்பிடிப்பு நடக்கும் என்றும் செப்டம்பர் மாதத்தில் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளை முடித்தால் நவம்பர் பத்தாம்தேதி வெளியிடச் சரியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close