Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்தின் அடுத்தபடத்தைத் தயாரிப்பது சத்யஜோதி பிலிம்ஸ்?

அஜித் இப்போது சிறுத்தைசிவா இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அந்தப்படத்தக்குத் தயாரிப்பாளர் யார் என்று சொல்லப்படவில்லை. இப்போது அஜித்தின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது சத்யஜோதிபிலிம்ஸ் என்று சொல்லப்படுகிறது. அந்த நிறுவனத்தில் எடுக்கப்படும் படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை யாவரும்நலம் படத்தை இயக்கிய விக்ரம்கேகுமார் இயக்கப்போகிறார் என்றும் செய்திகள் வருகின்றன.

சத்யஜோதி சிறுவனத்துக்கு ஒரு படம் நடிப்பதாக அஜித் சொல்லியிருக்கிறார் என்றும் ஆனால் அந்தப்படத்தை இயக்கப்போவது விக்ரம்கேகுமார்தானா என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்கிறார்கள்.

இயக்குநர் யாராக இருந்தாலும் படத்தைத் தயாரிக்கப்போவது சத்யஜோதிநிறுவனம்தான் என்றும் சொல்கிறார்கள். அஜீத்தின் அடுத்தபடம் பற்றி நிறையச் செய்திகள் வந்துவிட்டன.

இதுவும் அவற்றில் ஒன்றா அல்லது உண்மைதானா? என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close