Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளியைக் குறிவைக்கும் கமல்!

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், கமல் த்ரிஷா நடிக்கும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில், பூந்தமல்லியிலுள்ள ஒரு தனியார்திரைப்பட நகரில் நடந்துகொண்டிருக்கிறது.

படப்பிடிப்புகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மே மாதம் தொடங்கிய தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் படக்குழு முடிக்கவிருக்கிறது. த்ரிஷா, சம்பத், கிஷோர் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துவருகின்றனர்.

இன்னும் இரண்டு தினங்களில் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடையும் என்று தெரிகிறது. பின்னர் படத்தைத் தொகுத்துப்பார்த்துவிட்டுத் தேவைப்படுகிற காட்சிகளைப் படமாக்கினால் போதும் என்று சொல்லப்படுகிறது.

 “தூங்காவனம் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. பாடல்கள், ஆக்‌ஷன், ஷூட்டிங், பஞ்ச் எல்லாமே சவால் தான்” என்று படம் குறித்து ட்விட்டரில் ட்விட் செய்திருக்கிறார் த்ரிஷா.

பிரஞ்சு படமான ஸ்லீப்லஸ் நைட் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் கதையே தூங்காவனம். ஜிப்ரான் இசையில், கமல்ஹாசனே தயாரிக்க தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டும் மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close