Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித்துக்கு வில்லனாக ஆசைப்படும் தெலுங்கு நடிகர்!

 தெலுங்கின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ஜகபதி பாபு தொடர்ந்து தமிழ் படங்களிலும் , தமிழ் விழாக்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்று வெளியான மகேஷ் பாபுவின் ‘செல்வந்தன்’ படத்திலும் ஜகபதி பாபு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘கான்’ படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். 

சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது தமிழில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டன. அதற்கு அஜித்துக்கு வில்லனாகவோ அல்லது அவருக்கு நண்பராகவோ நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்