Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புகைபிடிக்கிற மாதிரி நடிக்கலாமா? சர்ச்சையில் சத்யராஜ்

தரணிதரன் இயக்கத்தில் சத்யராஜ், சிபிராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ஜாக்சன்துரை. இது பேய்க்கதையைக் கொண்டபடம். அண்மை காலமாக பேய்க்கதைகளுக்கு நல்லவரவேற்பு இருப்பதால் இந்தக்கதைக்கும் வரவேற்பு இருக்கும் என்று நம்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் சத்யராஜ் பேயாக நடிப்பதாகச் சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் வெளியான அப்படத்தின் குறுமுன்னோட்டம் அமைந்திருக்கிறது. அதில் சத்யராஜ் பேய் போன்றுவருகிறார்.

ஓங்குதாங்கான அவருடைய உருவத்துக்குப் பேய்வேடம் நன்றாகப் பொருந்தியிருக்கிறதென்று வரவேற்கப்படுகிற அதேவேளையில் அவர் புகைபிடித்துக்கொண்டு வருவதுபோல் காட்சி இருக்கிறது.

புகைபிடிக்கும் காட்சிகளுக்கு பரவலாக எதிர்ப்பு இருக்கிற நேரத்தில் சத்யராஜ் போன்ற மூத்தநடிகர் இவ்வாறு நடிக்கலாமா? என்கிற கேள்வி வருகிறது. அண்மையில் தனுஷ் நடித்த மாரி படத்தின் முதல்முன்னோட்டம் வந்தபோது இதே விமர்சனங்கள் வந்தன. இப்போது சத்யராஜூக்கும் விமர்சனங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close