Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியா செல்கிறது ரஜினி பட டீம்: 30 வருடங்கள் கழித்து ரஜினியுடன் சத்யராஜா?

 ரஜினியின் வில்லன் என்றாலே இப்போதும் அனைவரின் இரண்டே பதில் ஒன்று சத்யராஜ், மற்றொன்று ரகுவரன். இந்த காம்பினேஷனை மட்டும் யாராலும் உடைக்க முடியாது. ‘பாட்ஷா’ படமாகட்டும், ‘மிஸ்டர் பாரத்’ படமாகட்டும் இப்போதும் ரஜினி ரசிகர்களின் லிஸ்டில் டாப் இடம் பிடித்தவை. 

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தில் 30 வருடங்கள் கழித்து மீண்டும் சத்யராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து சத்யராஜ் தரப்பிலும் படத்திற்கு நெருங்கிய வட்டங்களிலும் விசாரித்தபோது கண்டிப்பாக இல்லை. இது குறித்து யாரும் அவர்களிடம் பேசவில்லை என கூறினர். 

இந்த வில்லன் பாத்திரத்தில் நடிக்க இதற்கு முன்பு கிசுகிசுக்கப்பட்டவர் பிரகாஷ் ராஜ், எனினும் அவரும் இல்லை என உறுதியான நிலையில் தற்போது ஜகபதி பாபுவின் பெயரும் அடிபடுகிறது. இந்த படத்தில் ரஜினி தாதாவாக நடிக்க இருக்கிறார் என முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக ராதிகா அப்தே ஒப்பந்தமாகியுள்ளார். 

படக்குழு விரைவில் மலேசியா செல்லவிருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்கப்பட உள்ளது. படத்திற்கு காளி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பார்க்கலாம் எனினும் இப்போது வில்லன் என கிசுகிசுக்கப்பட்டவர்கள் எவர் நடித்தாலும் படத்துக்கு மிக பொருத்தமகாவே இருக்கும். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close