Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர்களுக்கு மோடியின் வேண்டுகோள்!

 தனது ஸ்வச் பாரத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை முதல் முறையாக இந்தியாவின் முக்கிய பிரபலங்களை செய்வதற்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுல்கர், ஹ்ருத்திக் ரோஷன் என அனைவரும் தூய்மை இந்தியா பணியை மிக ஈடுப்பாட்டுடன் செய்தனர். அவர்களை பின் தொடர்ந்து பல ரசிகர்கள் பொதுமக்கள் , அமைப்புகள் என இப்பணியில் தங்களை ஈடுபடுத்தினார்கள். 

இந்நிலையில் அடுத்தகட்டமாக சென்னையில் நடைபெற்ற தேசிய கைத்தறி விழாவில் நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார் அதில் பேசிய போது நடிகர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று கைத்தறி தொழில் நலிந்துவருவது குறிப்பிடத்தக்கது. அதை முன்னேற்றும் வகையில் அவ்வப்போது அரசே கைத்தறி கண்காட்சிகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் மத்திய அரசு சார்பாக கைத்தறி விழா சென்னை பல்கலைக் கழகத்தில் இன்று நடந்தது. 

அதில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ‘ பத்தில் ஒரு படத்திலாவது நடிகர்கள் கைத்தறி ஆடைகளைப் பயன்படுத்தி மக்களிடம் கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்த வேண்டும். இதனால் கைத்தறி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களுக்கு பேருதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close