Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் செய்த சாதனை

கமலின் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அதற்குப் பிறகான வேலைகளைத் தொடங்கிவிட்டார்களாம்.நவம்பர் தொடக்கத்தில் தீபாவளியன்று படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

தீபாவளியைத் தாண்டினாலும் எப்படியும் இந்தஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள். அப்படி இந்தப்படமும் வெளியாகும் பட்சத்தில் சுமார் இருபதுஆண்டுகளுக்குப் பறிகஒரே ஆண்டில் மூன்றுபடங்களை வெளியிட்ட சாதனையைச் செய்துவிடுவார் கமல். தொடக்கக் காலத்தில் கமல் படங்கள், ஓராண்டுக்கு ஐந்தாறு அல்லது ஏழெட்டு வந்ததெல்லாம் நடந்தது.

அவர் பெரியஸ்டாரான பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. 1995 ஆம் ஆண்டில், சதிலீலாவதி, சுபசங்கல்பம் (தெலுங்கு), குருதிப்புனல் ஆகிய மூன்றுபடங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்பின்னர் இப்போதுதான் ஓராண்டில் மூன்றுபடங்கள் வெளியாகவிருக்கின்றன.

தூங்காவனம் தெலுங்கிலும் வெளியானால் நான்குபடங்கள் கணக்காகிவிடும். இவற்றில் மூன்றும் தமிழ்ப்படங்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் 2000 ஆம் ஆண்டில், ஹேராம் தமிழ், இந்தி ஆகியனவற்றில் வெளியானதால் அந்த ஆண்டு வெளியான தெனாலியோடு சேர்த்து மூன்றுபடங்கள் வெளியாகின.

ஒரேபடம் இருமொழிகளில் வெளியானதைக் கணக்கில் கொள்ளாவிட்டால் இருபதுஆண்டுகளுக்குப் பிறகு இந்தச்சாதனையை அவர் செய்திருக்கிறார். அதோடு அவர் தற்போது ஒருபடத்துக்கு வாங்கும் சம்பளத்தைக் கணக்கிட்டால் இந்தஆண்டின் அதிகம் சம்பாதித்த நடிகராவும் அவர் இருக்கக்கூடும். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்