Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சண்டிவீரனுக்கு சிங்கப்பூரில் தடை, படக்குழுவினர் அதிர்ச்சி

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் நேற்று வெளியாகி ஒடிக் கொண்டிருக்கும் படம் "சண்டி வீரன்".

வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களைப் பெற்ற சண்டி வீரன் படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்படங்கள் சிங்கப்பூரில் வெளியாக வேண்டுமானால் அங்கு தனியாகத் தணிக்கை செய்தாகவேண்டும்.

அதற்காக சண்டி வீரன் படத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் தணிக்கை குழு சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும்  “ரோத்தா” என்னும் தண்டனை படத்தில் காண்பிக்கப்படுவதால் படம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம். அது படத்தில் மிக முக்கியமான காட்சி என்பதால் அதை நீக்கவும் முடியாதென்கிறார்கள். நம்ம ஊர் தணிக்கைக்குழு எவ்வளவோ தேவலாம் போலிருக்கே.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close