Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதி, சிம்பு திடீர் மோதல், தொடரும் பரபரப்பு

சிம்புவின் வாலு படம் மீதான சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வருகிற 14 ஆம் தேதி அப்படம் வெளியாகிவிடும் என்று உறுதியாகச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தாலும் படத்தின் விளம்பரங்களில் வெளியீட்டுத்தேதி குறிப்பிடப்படாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் சரியான திரையரங்குகள் கிடைக்காததுதான் என்று சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கும் வாசுவும்சரவணனும்ஒண்ணாபடிச்சவங்க படத்துக்காக நிறையத் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்திருப்பதால் இந்தப்படத்துக்குச் சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் அந்தப்படத்தை வெளியிடும் உதயநிதிஸ்டாலினால் வாலு படம் வெளியாவதில் சிக்கல் என்று சிம்பு ரசிகர்களும், எங்கள் அண்ணன் பாட்டுக்கு அவர் வேலைகளைப் பார்க்கிறார் அவரைச் சீண்டாதீர்கள் என்று உதயநிதி ரசிகர்களும் வலைதளங்களில் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து, தன் ரசிகர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்று சிம்பு வேண்டுகோள் விடுக்கிறார். இதனால் திரையுலகில் பரபரப்பு நிலவிக்கொண்டிருக்கிறது. இதேபோல சில மாதங்களுக்கு முன்பாக கொம்பன் படம் வெளியாக உதயநிதி தடையாக இருக்கிறார் என்கிற செய்திகள் வந்தன, அப்போது அதைக் கடுமையாக மறுத்து உதயநிதி அறிக்கை வெளியிட்டார்.

இப்போது இந்தச்சிக்கலில், நான் எந்த நடிகருக்கும் எதிரானவன் அல்ல, அடுத்தவரைக் குற்றம் சொல்லும் போது மூளையை உபயோகியுங்கள் (அப்படி ஒன்று இருந்தால்) என்று சொல்லியிருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close