Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராகவா லாரன்ஸ் இயற்கை விவசாயத்திற்காக மாணவர்களுக்கு பண உதவி!

ராகவா லாரன்ஸ் இயற்கை விவசாயத்திற்காக அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு பண உதவி செய்திருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ், நடிப்பை தாண்டி பல சேவைகளை செய்து வருகிறார். சமீபத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் செயல்படும் 'பசுமை' திட்டத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதன்மூலம் கலாம் விட்டு சென்ற பாதையில் 100 ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியுள்ளார்.

தற்போது, இயற்கை விவசாயத்தை கையிலெடுத்திருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூபாய் 2,50,000க்கான காசோலை வழங்கி அவர்களின் களப்பணிகளை செம்மையாக செய்ய உதவி இருக்கிறார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து, கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய உள்ளனர்.

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பண உதவி செய்துள்ளார்.

ஐ.மா.கிருத்திகா

(மாணவ பத்திரிகையாளர்)

MUST READ

எடிட்டர் சாய்ஸ்