Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மைக்ரோமேக்ஸ் உரிமையாளரை மணக்கிறார் அசின்!

 ’உள்ளம் கேட்குமே’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின், எனினும் முதலில் வெளியானது எம் குமரன் S/o மகாலட்சுமி’. இந்த படத்தையடுத்து தொடர்ச்சியாக கமல், அஜித், விஜய், சூர்யா, என ஜோடி சேர்ந்தவர் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்தவர் பின்னர் இந்தி படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டினார். 

அமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் திடீரென அங்கும் வாய்ப்புகள் குறைய நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘ஆல் ஈஸ் வெல்’ படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் அசின் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கம்பெனியான மைக்ரோமேக்ஸ் உரிமையாளரும் , பெரும் தொழிலதிபருமான ராகுல் ஷர்மாவை தான் அசின் திருமணம் செய்யவிருக்கிறார். 

திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் எண்ணம் இல்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் ஒப்பந்தமான அனைத்து சினிமா வேலைகளையும் முடித்துவிட்டு திருமணம் விரைவில் நடைபெறும் என தெரிகிறது. நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி வந்த இருவரும் பொறுமையாகவே கலந்து பேசி இந்த திருமண முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close