Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓடு...ஓடு ...மகளை உற்சாகப்படுத்திய ஜோதிகா!

சென்னையில் நடந்த குழந்தைகளுக்கான 'கிட்டத்லான்' போட்டியில் பங்கேற்ற தனது மகளை நடிகை ஜோதிகா உற்சாகப்படுத்தினார்.

சென்னை ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் குழந்தைகளுக்கான 'கிட்டத்லான் ' போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் சூர்யா- ஜோதிகா தம்பதியின் மகள் தியாவும் கலந்து கொண்டார்.ஏராளமான குழந்தைகள் பங்கேற்ற இந்த கிட்டத்லான் போட்டியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த போட்டியை பார்க்க நடிகை ஜோதிகாவும் நேரில் வந்திருந்தார். களத்தில் மகள் தியா ஓடுவதை கண்ட ஜோதிகா , மேடை ஏறி ஓடு...ஓடு என ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்.

படம்: கிரண் குமார்

(மாணவர் பத்திரிகையாளர்)

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close