Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினேகா-பிரசன்னா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகை சினேகா - பிரசன்னா தம்பதிக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இருவரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். காதலித்து  பெற்றோர்களின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இருப்பினும் சில படங்களில் மட்டும் நடித்துவந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகவே சினிகா எந்த படப்பிடிப்பிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அதன் பிறகு அவர் கர்ப்பமாக இருப்பதாக பிரசன்னா ட்விட்டரில் ட்விட் செய்து குழந்தை பிறக்கப்போவதை உறுதிபடுத்தினார்.

இந்நிலையில் பிரசன்னா - சினேகா தம்பதியருக்கு நேற்றிரவு அழகான ஆன்குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “ என் ஏஞ்சல் சினேகா ஆழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்” என்று ட்விட் செய்துள்ளார்.

குழந்தை பிறந்ததால், நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களது உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close