Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினிமா தயாரித்து மொத்தப் பணத்தையும் இழந்த நடிகையின் பரிதாபக்கதை

விஜய் ஹீரோவாக நடித்து வெளியான பத்ரி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

அந்த சமயத்தில் யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பட வாய்ப்புகள் அமையாமல் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர் தெலுங்கில் ஓரிரு படங்களைத் தயாரித்தார். தான் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் செலவழித்து படம் தயாரித்ததில் அவருக்கு 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பட வாய்ப்பும் இல்லாமல், பண நஷ்டமும் ஏற்பட்டதால் சில மாதங்களாகவே அவரை கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில்  காணமுடியவில்லை.

தற்பொழுது அவரும் கணவர் பரத்தும் துபாயில் வசிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு யோகா பள்ளி நடத்துவதாகச் சொல்லப்படுகிறது. சினிமாவில் நடித்துச் சம்பாதித்த பணம் எல்லாம் போனதோடு நிறையக் கடன்களும் இருப்பதால் விட்ட  யோகா பள்ளி நடத்துகிறாராம். மன அமைதியோடு பணமும் சம்பாதிக்கமுடியும் என்பதால் அவர் இதில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நடிகைகள் என்றால் செல்வாக்கானவர்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.  மாறாக இவ்வாறு கஷ்டப்படுகிறவர்களும் சரிபாதிக்கு மேல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close