Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுந்தர்சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்?

விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய புலி படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. செப்டெம்பர் 17 அன்று அந்தப்படம் வெளியாகவிருக்கிறது. இப்போது அவர் அட்லி இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்தப்படத்தை முடித்தபிறகு அவர் எந்தப்படத்தில் நடிக்கப்போகிறார்? என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத்தகவலும் இல்லை. விரைவில் அவர் சுந்தர்சி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கலாம் என்கிற தகவல் இப்போது வந்திருக்கிறது.

அண்மையில் தன்னுடைய சமுகவலைதளம் மூலம் பின்தொடர்பவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறார் குஷ்பு. அப்போது ஒருவர், இளையதளபதியும் சுந்தர்சியும் இணைந்து ஒருபடம் தருவார்களா என்று கேட்டார். அதற்கு, விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார். எனவே அடுத்த விஜய் படத்தை சுந்தர்சிதான் இயக்கப்போகிறார் என்கிற செய்திகள் வலம்வரத்தொடங்கியுள்ளன.

சுந்தர்சி, நகைச்சுவையை மையமாகக் கொண்ட படங்களை இயக்குபவர். விஜய்க்கும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட வேடங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும் என்பதால் இது நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்று சொல்கிறார்கள். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close