Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்யால் மேலும் பலனடையும் டி.ராஜேந்தர்

சில வருடங்களாக நீடித்த சிக்கல்கள் முடிவுக்கு வந்து ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கிறது சிம்பு நடித்த வாலு. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் டி.ராஜேந்தர்.

இந்தச்சிக்கல் தீர நடிகர் விஜய் உதவி செய்தார் என்பதையும் குறிப்பிட்ட டி,ராஜேந்தர், விஜய் அவருடைய படத்தாயரிப்பாளரையும் அவருடைய படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தரையும் கூப்பிட்டு எனக்கு உதவும்படி சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி என்று சொன்னார்.

அதோடு இனி தொடர்ந்து சிம்பு சினிஆர்ட்ஸ் நிறுவனம் படங்களை வாங்கி விநியோகிக்கும் வேலைகளைச் செய்யும் என்று சொன்னவர், அநேகமாக விஜய்யின் புலி படத்தின் சேலம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வெளியிடும் உரிமையை வாங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

வாலு படத்துக்கு விஜய் உதவியிருக்கிறார், புலி படத்தை இரண்டுபகுதிகளில் விநியோகம் செய்வதன் மூலம் மேலும் பலனடையவிருக்கிறார் டி.ஆர் என்று சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்