Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.ராஜேந்தருக்கு நன்றி சொன்ன உதயநிதி. முடிவுக்கு வந்ததா வாலு சர்ச்சை?

வாலு படத்துக்குத் திரையரங்குகள் கிடைக்காமல் உதயநிதி தடுக்கிறார் என்பது போன்ற கருத்துகள் சிம்பு ரசிகர்களால் சொல்லப்பட்டது. அதையொட்டி உதயநிதி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனால் கடுங்கோபமடைந்த உதயநிதி, கடுமையான வார்த்தைகளைச் சொல்லி அந்தக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வாலு படவெளியீடு சம்பந்தமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த, டி.ராஜேந்தரிடம் இதுபற்றிக்கேட்டபோது, இதில் நான் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன், அதிகப்படங்களை வெளியிடுகிற விநியோகஸ்தருக்கு அதிகமான திரையரங்குகள் கிடைப்பது இயல்பானதுதான் என்று சொல்லியிருந்தார்.

அவர் இவ்வாறு சொன்ன விசயம் தெரிந்த உதயநிதி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நான் எப்போதும் டி.ஆர் சாரை மதிப்பவன், உண்மையைத் தெளிவுபடுத்தியதற்காக அவருக்கு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.

சமுகவலைதளங்களில் மட்டுமே இந்தவிசயம் பகிரப்படுகிறதா? அப்பது அதைத்தாண்டி தனிப்பட்ட முறையில் யாராவது பேசி சமாதானம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை. எப்படியோ இந்தச்சிக்கல் இதோடு முடிவுக்கு வந்தது நல்லவிசயம்தான்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close