Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உறுதியானது மணிரத்னத்தின் அடுத்த படம்!

ஓகே கண்மணியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவருகிறார் மணிரத்னம். மீண்டும் ஒரு நட்சத்திரப் பட்டாளத்துடன் வித்தியாசமான கதைத் தளத்துடன் படம் தயாராகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கார்த்தி, துல்கர்சல்மான் ஆகியோர் நாயகர்களாக நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தில் நாயகிகளாக கீர்த்திசுரேஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம். வழக்கம்போலவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.  இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது!

முதன் முறையாக மணிரத்னம் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் பணியாற்றவிருக்கிறார்.   தசாவதாரம், வேட்டையாடுவிளையாடு, அந்நியன் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்திப் படங்களில் பிஸியான ஒளிப்பதிவாளராக இருக்கும் ரவிவர்மன் மற்றும் மணிரத்னம் கூட்டணி ஒரு மாறுபட்ட விஷுவல் ட்ரீட் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆடியோ வடிவில் கேட்க:

MUST READ

எடிட்டர் சாய்ஸ்