Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் விஷாலுடன் ஜோடி சேருகிறார் லட்சுமிமேனன்?

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் பாயும்புலி படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அவர் இப்போது பாண்டிராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்தப்படத்தைத் தொடர்ந்து, குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்துக்கு மருது என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

படத்தில் நாயகியாக இலட்சுமிமேனனை நடிக்கவைக்கவேண்டும் என்பது இயக்குநரின் விருப்பமாம். அதை விஷாலிடம் சொன்னபோது அவரும் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவர்தான் நாயகி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் முத்தையாவின் முதலிரண்டு படங்களிலும் அவர்தான் நாயகி.

மூன்றாவது படத்திலும் அவரையே நாயகியாக்கவேண்டும் என்று அவர் விரும்புவது எதனால் என்று தெரியவில்லை. இந்தப்படத்தில் அவர் நடிப்பது உறுதியானால் விஷாலுடன் நடிக்கும் மூன்றாவது படமாகவும் இருக்கும். ஏற்கெனவே பாண்டியநாடு மற்றும் நான்சிகப்புமனிதன் ஆகிய படங்களில் விஷாலுடன் நடித்திருக்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close