Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழில் கிடைக்காத வரிவிலக்கை இந்தியில் பெற்றது பாபநாசம் கதை!

மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுபோல், தமிழில் கமல் நடித்து பாபாநாசம் என்கிற பெயரில் வெளியானது.

தமிழகத்தில், தமிழில் பெயர் மற்றும் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுகிற வகையில் இருந்தால் அந்தப்படங்களுக்கு வரிவிலக்குக் கொடுக்கலாம் என்கிற நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அப்படியிருந்தும் பாபநாசம் படத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் சரியில்லை என்று சொல்லி அதற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது.

அண்மையில் இந்தப்படம் த்ரிஷ்யம் என்கிற பெயரிலேயே இந்தியிலும் வெளியானது. அஜய்தேவ்கன், ஸ்ரேயா, தபு ஆகியோர் நடித்த அந்தப்படம், தென்னிந்தியாவில் வெற்றி பெற்றதுபோலப் பெரிதாக வெற்றி பெறவில்லையென்றும் சுமாராகவே போனதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் அந்தப்படத்துக்கு உத்தரப்பிரதேச அரசு வரிவிலக்குக் கொடுத்திருக்கிறதாம். நல்லபடம் என்கிற அடிப்படையில் இந்தப்படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். இதையொட்டி தன்னுடைய டிவிட்டரில், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் அஜய்தேவ்கன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close