Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் நடிக்க வருகிறார் ஜெனிலியா!

 ஹா...ஹா.. ஹாசினி இந்த ஒற்றை வார்த்தையில் தமிழ் சினிமா நெஞ்சங்களைக் கொள்ளைக்கொண்டவர் ஜெனிலியா. ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து ‘சச்சின்’, சந்தோஷ் சுப்ரமணியன்’, ‘உத்தம புத்திரன்’ என பல படங்களில் நடித்தார். 

தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என ஜெனிலியா நான்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இடையில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்தவர் குடும்ப வாழ்வில் கவனம் செலுத்த துவங்கினார். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தையும் கடந்த 2014 நவம்பரில் பிறந்தது. 

இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார். அவர் நடிக்க வருகிறார் என்றவுடன் காத்திருந்த சினிமா உலகம் உடனே மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டது. ’இட்’ஸ் மை லைஃப்’ , ’ராக் த ஷாடி’, மற்றும் ’ஹூக் யா க்ரூக்’  என மூன்று படங்களில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் ஜெனிலியா. 

மேலும் நீண்ட நாட்கள் கழித்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ள மகிழ்ச்சியை ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’படப்பிடிப்புக்கு சென்றுகொண்டிருக்கிறேன்...3 வருடங்கள் ஆகின்றன எனது கடைசி ஷாட் எடுத்து. இந்த நாள் மிக நல்ல நாளாக அமையும் என உணர்கிறேன்’ என ட்வீட் செய்ய அதை ஜெனிலியாவின் கணவர் ரீட்வீட் செய்து ‘ இது சிறந்த நாளாக அமையும். நீ அதற்காக தான் பிறந்திருக்கிறாய்’ என வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close